காடுவெளி சித்தரின் ஜீவ சமாதி - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகில் உள்ள அமுதவள்ளி தர்கா அருகில் உள்ளது. இஸ்லாமியசகோதரர்கள் நிறைந்த பகுதியில் மிகவும் ஒதுக்குப்புறமான இடத்தில் போதிய பராமரிப்பு இல்லாமல் இருந்தததை கண்டு மிகவும் வேதனைஅளித்தது. சில நாட்களுக்கு முன்பு அடியேனுக்கு தரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டியது. காஞ்சிபுர அடியார்கள் இந்த சமாதிக்கு ஒரு சிறிய கோயில் கட்டினால் , பல தலைமுறைகள் வழிப்பட வசதியாக இருக்கும்.
சித்தரின் வரலாறு:
கடுவெளிச்சித்தர் என்பவர் திண்டிவனம் ஆரோவில் அருகில் உள்ள இரும்பை கிராமத்தில், சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார்.அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லைஎன்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தைகலைக்கமுயற்சித்தான். தவம் கலைந்து சித்தர், உண்மையை கேட்டு தவத்தைதொடராமல் சிவ பணி செய்ய தொடங்கினார். ஒரு முறை கோயில் விழாவில் சித்தரின் தவத்தை கலைத்த தாசியும் நடனம் அட, அச்சமயம் அவள்காலில் இருந்த சிலம்பு கீழே விழுவததை கண்ட சித்தர் - இதனால் விழாவிற்கு தடங்கள் வந்துவிடுமோ என்ற நல் எண்ணத்தில் சிலம்பை அவளதுகாலில் கட்டி விட்டார். இதை பார்த்து மக்கள் இவரை பற்றி தவறாக பேசி ஏளனம் செய்தனர். மனம் நொந்துபோன சித்தர், சிவனை நோக்கி பாட கோயிலில் இருந்த சிவா லிங்கம் மூன்றாக வெடித்தது. தவறை உணர்ந்த் மக்களும் மன்னனும் மன்னிப்பு கேட்டார்கள். மீண்டும் சிவனை நோக்கிபாட, உடைந்த பாகங்கள் ஒன்று சேர்ந்தன.
**********************************
Kaduveli Sithar Samathi, Kanchipuram - is located near Kanchi Ekambaranathar temple. Few meters from the temple is the Amudhavalli Dharga - stone throw away from the dharga is where the Jeeva Samathi located. The Jeeva samathi lacked basic structure or pathway and I pray that Kanchi Sivan adiyargal will come forward to renovate the place and save it for the future generation.
Kaduveli Sithar was doing penance in Irumbai village near Tindivanam/Auroville. During that time people were suffering from severe drought. The king thought the rain had failed due to the Siddhars penance and decided to sent a devadasi to stop his penance. Disturbed , he stopped his penance and opened his eyes. After knowing the reason for the act, he decided not to continue his penance. He devoted himself to the service of the Lord. One day during the temple festival, the devadasi who disturbed his penance was dancing before the procession and her anket fell down. Sithar did not want this incident to disturb/stop the procession, immediately picked and fixed it to her leg again. Seeing his act the people started mocking at the Sithar. Angered by the act -Sithar sang song in praise of lord who decided to show his devotion & dedication to all the people. The Siva Linga in the temple split into three. Realising their mistake , the King and his people apologised. The Sithar sang again and to everyones surprise the split part joined again.
1) - கோயிலில் இருந்து தர்காவிற்கு செல்லும் வழி / Way to Dharga from the Temple
2) - அமுதவள்ளி தர்கா / Amudha valli Dharga
3) தர்காவில் இருந்து ஜீவசமாதி செல்லும் வழி / Way to Jeeva Samathi from Dharga
4) பராமரிப்பு இல்லாமல் இருக்கும் நுழை வாயில் / Entrance without any proper maintanence
5) காடுவெளி சித்தரின் ஜீவ சமாதி /Jeeva Samathi
Reference
1) http://temple.dinamalar.com/New.php?id=159
2) http://www.auroville.org/environment/villages/Kaduveli_siddhar_legend.html
3) http://sadhanandaswamigal.blogspot.in/2010/05/jeeva-samadhi-in-and-around-chennai.html