Sunday, August 31, 2014

அருள்மிகு மரகதவல்லி,மாணிக்கவல்லி சமேத மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் - தவசிமடை, திண்டுக்கல் / Arulmigu Maragathavalli, Manikavalli Sametha Magalingeshwarar Temple - Thavasimadai, Dindugal.

அருள்மிகு மரகதவல்லி,மாணிக்கவல்லி சமேத மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் - தவசிமடை, திண்டுக்கல்

Arulmigu Maragathavalli, Manikavalli Sametha Magalingeshwarar Temple - Thavasimadai, Dindugal



அருள்மிகு மரகதவல்லி,மாணிக்கவல்லி சமேத மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். The temple stands here for more than 1000 years. 

மகம் நட்சத்திர திருக்கோவில் - மகம் நட்சத்திர நாளில் இங்கு விசேஷ பூஜைகள் நடக்கும். 
The temple belongs to star Magam and special poojas are performed during magam-star day.



பரத்வாஜ மஹரிஷி இங்கு வாழ்ந்ததாக ஐதீகம். அவருடைய சமாதி கோயிலில் முன்பாக உள்ளது. இரு பீடங்களை உள்ள சமாதியை கடந்துதான் கோயில் உள்ளே செல்ல முடியும். இக்கோவிலில் இரண்டு அம்பிகைகள் இருப்பது மிகவும் அபூர்வமான அமைப்பு. இச்சா, கிரியா சக்திகளாக இவர்கள் விளங்குவதாக ஐதீகம். சிவலிங்கத்திற்கு எதிரே பைரவர் "ஆதி பைரவராக" காட்சி அளிக்கின்றார். 
Saint Barathwaj believed to have lived here and his samathi is found in-front of the temple. All devotees should need to cross the two small pillar to enter the temple. There are two goddesses in this temple and believed to be representing Icha & Kiriya shakthis. Such form is very rare. The Bairava in-front of the Sivalinga is called as "Aathi Bairava".  





கோயிலின் சிறப்புகள் 

1) அதி பைரவர் முதன் முறையாக உருவான ஸ்தலம்.
2) ஸ்ரீ ராமரும் , ஆஞ்சநேயரும் தரிசித்த இடம். தனக்கு உதவிய ஆஞ்சநேயரும் உணவு இட்ட இலையை இரண்டாக பிரிக்க , நடுவில் கொடு போட - வாழை இலை பிறந்ததாக நம்பப்படுகிறது. ஸ்ரீ ராமர் சந்தியாவந்தன பூஜைகள் செய்த பாஸ்கரச்சரயு இருத்த இடம் இதுதான் என்று நம்பப்படுகிறது. 
3) அயோத்தியுடன் சூக்கும ரீதியான பூமியடி தொடர்புடைய ஸ்தலம். 

Temple Specialities

1) The first ever "Athi Bairavar" believed to have originated in this place. 
2) Sri Ramar and Anjaneyar have visited this place. In order to give half of the food provided to him to Aanjaneya, he draw a line across the leaf. Since this incident, all banana-leaf got the formation like today and so this place is considered to be the birth place of banana leaf. 
3) Lord ram performed Santhiyavanthana pooja's in the banks of Baskarasarayu - believed to have existed here. 










கோயில் காட்டின் நடுவில் இருப்பது போலத்தான் அமைப்பு இருக்கிறது. கோயிலை சுற்றி சுவர், கோபுர கட்ட முற்பட்ட அனைத்து தருணங்களிலும் தடங்கள் வந்தமையால் அப்படியே விட்டுவிட்டார்கள் என்று கோயில் பூசாரி கூறினார். சிவலிங்கத்தின் இடது முன்புறத்தில் கடந்து இருநூறு ஆண்டுகளில் ஜீவ சமாதி அடைந்த இருவர், மூவரது சமாதிகள் உள்ளன. 

The temple surroundings reminds us of a forest area and situated in a woodland. Many efforts to built walls and gopuras have failed and devotees have stopped taking any efforts. The local priest said it is God's wish to remain the way it is. In front of the Shiva linga, to the left there are few jeeva samathis who attained mukthi in this place.  




செல்லும் வழி

திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் பேருந்தில் விராலிப்பட்டியில் இறங்கி அங்கிருந்து ஶேர்ஆடொவிலொ அல்லது சிற்றுந்தில் சென்றாள் தவசிமடை அடையலாம். 

Way to Temple

From Dindugal, take bus that goes to Natham and get down at Viralipatti junction. From the junction, take share autos or buses to reach Thavasimadai. 

Viralipatti Kottu Rodu/விராலிப்பட்டி


Reference

1) http://temple.dinamalar.com/New.php?id=753
2) http://www.valaitamil.com/shiva-temple-arulmigu-mahalingeshwarar-thirukoyil-t313.html 

பெங்களூரு மடிவாளாவில் உள்ள புராதான சோமேஷ்வரா திருக்கோவில்/ Bengaluru – Madiwala -Someshwara Temple

பெங்களூரு மடிவாளாவில் உள்ள புராதான சோமேஷ்வரா திருக்கோவில்  
Bengaluru – Madiwala -Someshwara Temple


இறைவன் அருளால் - பெங்களூரு மடிவாளாவில் உள்ள புராதான சோமேஷ்வரா திருக்கோவில் செல்லும் பாக்கியம் இன்று கிட்டியது. பெங்களூரு மாநகரில் மிகவும் பழைய கோயில்களில் இதுவும் ஒன்று. மடிவாளா ஆஞ்சநேயர் சிலையில் இருந்துநடக்கும் தொலைவில் உள்ளது. சோழ அரசர்களால் கட்டப்பட்ட இந்த கோயில் 12ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இறைவன் சுயம்பு சிவலிங்கமாக காட்சி தருகிறார்.


The siva temple is one of the oldest temple in Bengaluru. It’s walk able from the Madiwala Anjaneya statue. The Chola rulers built the temple way back in the 12th century. Siva linga in this temple is Suyambu.


கோயில் நுழை வாயில் - Temple Entrance

கோயிலில் உள்ள புராதான மரம். Old tree inside the tree.

கோயிலில் உள்ள புராதான தூண். Ancient stone pillar inside the temple. 

தமிழில் உள்ள கல்வெட்டுகள் - Tamil inscription on the temple walls. 


Reference

1) http://en.wikipedia.org/wiki/Old_Madiwala_Someshwara_Temple,_Bangalore
2) http://swamisblog.blogspot.in/2008/01/my-visit-to-ancient-temple-sri.html