முதியவர் ஒருவர் கவனித்து வரும் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு சிவாலயம்!!
கடலூர் அருகே - சின்ன நரிமேடு அருள்மிகு பிரகன் நாயகி உடனூறை ஸ்ரீ தென்காங்காபுரீஸ்வரர் ஆலயம்!!
முதியவர் ஒருவர் தனியே கவனித்து வரும் 1200 ஆண்டுகள் பழமையான ஒரு சிவாலயம்!!
கடலூர் அருகே சின்ன நரிமேடு கிராமத்தில் உள்ளது மிகவும் தொன்மையான அருள்மிகு பிரகன் நாயகி உடனூறை ஸ்ரீ தென்காங்காபுரீஸ்வரர் ஆலயம்.
 |
கோயில் அருகில் உள்ள குளம். | | | |
 |
கரும்பு தோட்டத்துக்கு இடையே கோயில்.
|
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் கி.பி 7-8 நூற்றாண்டை சேர்ந்தது. சோழர் மற்றும் கடைக்கால பாண்டியர் காலத்தில் பராமரிக்கப்பட்டு உள்ளது
என்று இத்திருக்கோயில்
கிடைத்த கல்வெட்டில் இருந்து தெரிகிறது. இதன் முற்காலப் பெயர் அறந்தாங்கி நல்லூர் ஆகும்.
2004ஆம் ஆண்டு இடிந்து போய் மண்மேடிட் இருந்த இக்கோவிலில் கண்டெடுக்கப்பட்ட 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த பைரவர் சிலையும் , 10ஆம் நூற்றாண்டைசேர்ந்த அம்மன் சிலையும், சோழர் காலத்தை சேர்ந்தது என ஆய்வில் தெரிகிறது.
 |
திருகோயில்
|
திரிசூல கல்வெட்டு:
இங்கு கண்டெடுக்கபட்ட ஒரு கல்வெட்டில் திரிசூலம் பொறிக்கபட்டுள்ளது. ஆறாம் மாற்வர்ம விக்கிரம பாண்டியனின் மந்திரிகளில் ஒருவனான அபிமானதுங்கப் பல்லாவராயன் இக்கோவிலுக்கு அளித்த நன்செய் புன்செய் நிலங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
 |
பூமியில் கிடைத்த திரிசூல கல்வெட்டுடன் முதியவர் |
 |
பூஜை செய்ய தயார் ஆகும் முதியவர். |
இடிந்துபோன நிலையில் உள்ள இக்கோயில், ஒரு முதியவர் தங்கி கவனித்து வருகிறார். போதிய மக்கள் வருகை இல்லாத கோயில்களில் இதுவும் ஒன்று என பார்த்த உடன் தெரிவது, வருந்த வேண்டிய ஒரு விஷயம்.
இக்கோவில் கடலூரில் இருந்து திருமானிக்குழி வழியாக பண்ரூட்டி செல்லும் வழி தடத்தில் உள்ளது. செல்லும் பொழுது முதியவருக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களும் வாங்கி செல்லுங்கள். முதியவர் சொந்தம் என்று சொல்லும் இரண்டு மூன்று பைரவர்களுக்கு முடிந்தால் பிஸ்கட் வாங்கி செல்லுங்கள்.
 |
முதியவர் சொந்தம் என்று சொல்லும் இரண்டு மூன்று பைரவர்கள். |
 |
தினத்தந்தியில் 16-2-2004 வெளிவந்த கோயிலை பற்றிய செய்தி | | | . | | | | |