Sunday, January 26, 2020

திருமறைச்சேரி அருள்மிகு சுந்தரநாயகி சமேத நாகநாதர் ஆலயம்!

*900 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம்*

நாகை மாவட்டம், திருக்குவளை வட்டம், திருமறைச்சேரி அருள்மிகு சுந்தரநாயகி சமேத நாகநாதர் ஆலயம் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல சிறப்புகள் மிக்க சிவாலயமாகும்.

இடைப்பட்ட காலத்தில் சமணர்களால் இடிக்கப்பட்டு வழிபாடற்ற நிலையிலிருந்ததை கண்டு உழவாரப்பணிக்குழுவின் துணையுடன் கடந்த 9 ஆண்டுகாலமாக மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டு 2016ல் திருப்பணி துவங்கி 2018 சூன் 4ம் நாள் அம்மையப்பனுக்கு வெகு சிறப்பாக குடமுழுக்கு நடந்தேறியது.

ஆலயத்தின் சிறப்புகள்.

(i) 900 ஆண்டுகள் பழமையான சிவாலயம்.
(ii) ராகு கேது பரிகாரஸ்தலம்.
(iii) 4வேதங்களும் வழிபட்ட ஆலயம்.
(iv) சூரியன் வழிபட்ட சிறப்பு வாய்ந்த ஆலயம், (சூரிய வழிபாடு பங்குனி 4, 5, 6, 7, 8.)
(v) 5.6 அடி உயர அம்பாளின் கம்பீரத்தோற்றம்.
(vi)சிவகரந்தை.
(vii) தோஷமில்லா ஊர் என்பதால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது.
(viii) காணாமல் போன பொருட்கள் கிடைக்க இங்குள்ள பைரவரை மனதார வணங்கி வழிபட நிச்சயம் திரும்பக்கிடைக்கும், அனுபவப்பூர்வ உண்மை.

இறைவனுக்குரிய வாசனை மிக்க சிவ கரந்தை எனும் செடி அபூர்வமாக காணப்படும் ஆலயமாகவும் விளங்குகின்றது.

கிராம சிவாலயம் என்பதால் வருமானம் இல்லாத திருக்கோயில். வரும் காலங்களில் பிரதோச வழிபாட்டிற்கும் , தேய்பிறை அட்டமி வழிபாட்டிற்கும், மாத பௌர்ணமி வழிபாட்டிற்கும் உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.

தொடர்பிற்கு

ப.முத்துக்குமரன்
+919840063124 மற்றும் +919080224250.

பண உதவிக்கு திருக்கோயில் வங்கிக்கணக்கு விபரம்.

Naganathar trust,
indian bank, tiruthuraipoondi branch,
CURRENT AC-NO; 6469348441
IFSC; IDIB000T042

Thirumaraichery Naganathar Kovil(Google Maps) - https://maps.app.goo.gl/FQv5hguzFq193vBD7








*திருச்சிற்றம்பலம்*

தகவல் சேகரிப்பு உதவி 

1) https://www.vikatan.com/spiritual/temples/122233-thirumaraicheri-naganathar-and-ambikai-temple

2) https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2018/jun/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2930537.html




No comments:

Post a Comment